Top News

நான்காவது கைத்தொழில் புரட்சி

 நான்காவது கைத்தொழில் புரட்சி

The 4th Industrial Revolution

தொழில்துறையின் வரலாறு. நான்காவது தொழில்துறை புரட்சி

தொழில்துறையின் வரலாறு மக்கள் வேலை செய்யும் முறையை மாற்றிய புரட்சிகளால் குறிக்கப்பட்டுள்ளது.  தொழில் 4.0 என்பது நான்காவது தொழில்துறை புரட்சியைத் தவிர வேறில்லை, அல்லது இந்த துறையில் செயல்படுத்தப்பட்ட நான்காவது முன்னுதாரண மாற்றம். அதனால் அதன் பெயர். 

  • கைத்தொழில்: தொழில்துறை செலவுகளைக் குறைக்கவும் உற்பத்தியை பெரிதும் மேம்படுத்தவும் அனுமதித்த தானியங்கி இயந்திரங்களின் தொடர்ச்சியான நீராவி இயந்திரத்திற்கு முதல் தொழில்துறை புரட்சி வந்தது. இது ஐரோப்பாவிலும் வட அமெரிக்காவிலும் XNUMX ஆம் நூற்றாண்டின் மத்தியில் மற்றும் XNUMX ஆம் நூற்றாண்டில் நடந்தது.
  • கைத்தொழில்: இரண்டாவது தொழில்துறை புரட்சி 1870 மற்றும் 1914 க்கு இடையில் வரும். இந்த விஷயத்தில் தொழில்துறையின் மின்மயமாக்கல் காரணமாக, ஒரு புதிய ஆற்றல் ஆதாரமாக. இது தொழில்துறையில் புதிய திறன்களையும், வெகுஜன உற்பத்திக்கான உந்துதலையும், தொலைபேசி, மின் விளக்கு போன்ற தொழில்நுட்ப முன்னேற்றங்களையும் கொண்டு வந்தது.
  • கைத்தொழில்: டிஜிட்டல் அல்லது கணினி யுகம் துறைக்கு வந்தபோது தொழில்துறை புரட்சியின் மூன்றாவது படி வந்தது. இப்போது பல வழிகளில் (வடிவமைப்பு, கணக்கீடு, இணைப்பு, ...) உதவ அனைத்து தொழில்துறை செயல்முறைகளையும் கணினிகளையும் சிறப்பாகக் கட்டுப்படுத்த முடிந்தது. இந்த மூன்றாவது புரட்சி 80 களில் வரும்.
  • கைத்தொழில்: மூன்றாவதாக சில தசாப்தங்களுக்குப் பிறகு, நான்காவது வரும். ஐசிடியால் பெரிதும் உந்துதல் மற்றும் துரிதப்படுத்தப்பட்டது. இப்போது கிளவுட், ஐஓடி, ஏஐ, ரோபாட்டிக்ஸ், நானோ டெக்னாலஜி, குவாண்டம் கம்ப்யூட்டிங், 3 டி பிரிண்டிங், தன்னாட்சி வாகனங்கள் போன்றவற்றுடன் புதிய திறன்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த தொழில்நுட்பங்கள் பல வருடங்களாக இருந்தாலும், ஆனால் இந்த 4.0 இல் இது ஒரு உற்பத்தி மட்டத்தில் தீவிரமான பயன்பாட்டை ஏற்படுத்தும் நோக்கம் கொண்டது.
நான்காவது தொழில்துறை புரட்சி, மற்றும் அதன் முன்னோடிகள்

நான்காவது தொழில் புரட்சி நல்லதற்கா?

புதிய தொழில்நுட்பமான செயற்கை மதிநுட்பம் 99 சதவீத மனிதர்களை மேலும் பிழியும்

உலகப் பொருளாதார நிலை நன்றாக இல்லை. உலக வங்கியின் தரவுகள் இதை உறுதிப்படுத்துகின்றன. உலகின் மிகப் பெரிய முதலாளித்துவ நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகியவற்றின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பு (ஜி.டி.பி.) 2006-2010 தொடங்கி 2011-2015 வரையிலான காலத்தில் லேசாக உயர்ந்து, பிறகு கிடைமட்டமாகிவிட்டது. இதில் கவனிக்க வேண்டிய காலம் 2008-களின் கடைசி காலாண்டும் 2015-ன் நடுப் பருவமும்.

2008-ன் கடைசி காலாண்டுப் பருவத்தில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகியவற்றில் வளர்ச்சி தேக்கநிலையை அடைந்து எதிர்மறையாகிவிட்டது. 2011-ல் இந்த வளர்ச்சி மெல்ல தலைதூக்கிய பிறகு, மீண்டும் சரிந்து கிடைமட்டமாகிவிட்டது. இனி விடியவே விடியாதா என்ற அச்சமும் கவலையும் உலகின் வட பகுதி நாடுகளைப் பீடித்திருக்கிறது.உலக நாடுகளைத் தங்களுடைய அரசியல், பொருளாதார பலம் காரணமாக ஆட்டிப் படைக்கும் முதலாளித்துவ நாடுகள் சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் ஆண்டுதோறும் கூடிப் பேசுவது வழக்கம். அப்படிப் பேசும் அவர்கள், இப்போது உலகுக்குப் ‘புதிய செய்தி’, ‘புதிய கோஷ’த்தை அளித்துள்ளனர். ‘நாலாவது தொழில் புரட்சி’ என்ற நூலை எழுதியுள்ள கிளாஸ் ஷ்வாப், பன்னாட்டுச் செலாவணி நிதியத்தின் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டின் லகார்டு இருவரும் இணைந்து ‘அந்தச் செய்தி’யை அளித்துள்ளனர். 

டாவோஸ் மாநாடு

லகம் அறிந்த ஒரே தொழில் புரட்சி குறித்துப் புத்தகம் எழுதியவர் சார்லஸ் டிக்கன்ஸ். தொழில் புரட்சியால் ஏற்பட்ட துன்பங்களை அதில் விவரித்து எழுதியிருந்தார்.

இரண்டாவது தொழில் புரட்சி எது, எப்போது என்று நீங்கள் கேட்கக்கூடும். நீராவி இன்ஜின் அறிமுகப்படுத்தப்பட்டபோது இரண்டாவது தொழில் புரட்சி ஏற்பட்டது என்று ஷ்வாபும், லகார்டேவும் கருதுகின்றனர். 1960-களில் மூன்றாவது தொழில் புரட்சி ஏற்பட்டது. கல்லூரிப் படிப்பைப் பாதியில் விட்ட பில்கேட்ஸும், பால் ஆலனும் அதைக் கொண்டுவந்தனர்.

மற்றொரு அமெரிக்கரான ஹென்றி போர்டு மோட்டார் வாகனத் துறையில் ஏற்படுத்திய புரட்சி அனைவரும் அறிந்ததே. மோட்டார் வாகனங்களைப் போக்குவரத்துக்குப் பயன்படுத்தத் தயாரித்த போர்டு, தன்னுடைய ஆலைத் தொழிலாளர்களே அதை முதலில் வாங்க வேண்டும் என்று ஊதியத்தை அவர்களுக்குத் தாராளமாக வழங்கினார். அதுதான் போர்டின் தனிச் சிறப்பு.

கேட்ஸ், ஆலன் தயாரித்த கணினிகளுக்கு எதிராக உலக அளவில் இடதுசாரிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். தொடக்க காலத்தில் கணினிகளை இயக்க, ஏற்கெனவே இருந்த பணியாளர்களுக்குப் பயிற்சியும் கல்வியும் தேவைப்பட்டது. ஏற்கெனவே, தட்டச்சு தெரிந்தவர்கள், கால்குலேட்டர்கள் மூலம் கணக்கு போடத் தெரிந்தவர்களுக்குப் பயிற்சி தர நேர்ந்தது. வெகு விரைவிலேயே வயதில் இளையவர்கள் அந்த வேலைகளைச் செய்யத் தொடங்கினர். அதன் பிறகு, இணையதளம் உள்ளிட்ட வசதிகள் காரணமாகக் கணினித் துறையில் லட்சக்கணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்பு பெருகிவிட்டது.

செயற்கை மதிநுட்பம்

ஷ்வாபின் ‘நாலாவது தொழில் புரட்சி’ என்ற நூல், ‘செயற்கை மதிநுட்பம்’(Artificial Intelligence) குறித்து விவரிக்கிறது. நுண்ணியதாக வடிவமைக்கப்பட்ட, செயற்கை மதிநுட்பம் பொருத்தப்பட்ட ரோபாட்டுகள் என்ற இயந்திர மனிதர்கள், உயிருள்ள மனிதர்களுக்குப் பதிலாக அவர்கள் செய்யும் வேலைகளைச் செய்வார்கள் என்கிறது. போர் செய்வதற்கும் பிள்ளைகளைப் பெறுவதற்கும் மட்டும் மனிதர்கள் தொடர்ந்து பயன்படுத்தப்படுவார்கள் என்கிறது நூல்.

இந்த ரோபாட்டுகளின் ஆக்கிரமிப்பு மிகவும் அச்சம் தரக்கூடியது. உலகின் 1% பெரும் பணக்காரர்கள் உலகின் 59% செல்வ வளங்களைத் தங்கள் பிடியில் வைத்திருக்கின்றனர். எஞ்சிய 99% மக்களுக்குத்தான் 41% செல்வ வளம் மிச்சம் வைக்கப்பட்டிருக்கிறது. ஜப்பானில் முதியவர்களின் எண்ணிக்கை அதிகமாகி விட்டது. 30 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ‘மேட் இன் ஜப்பான்’ என்ற முத்திரையுடன் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.

ஷ்வாப் கூறும் தொழில்நுட்பப் புரட்சியானது, மனஉழைப்பு ஊழியர்கள் பலருடைய வேலை வாய்ப்பைப் பறித்துவிடும். வீடுவீடாகச் சென்று விற்பது மட்டுமல்லாமல், அவற்றை வெற்றிகரமாக விற்பது எப்படி என்ற உத்தியைக்கூடத் தாங்களாகவே வகுத்துக்கொள்ளும் என்று கூறப்படுகிறது. ‘மனித இயந்திர’ங்களுக்கு மட்டுமே ஏகபோகமாக இருந்த பல செயல்கள், இனி ‘இயந்திர மனிதர்’களாலும் செய்ய முடியும் என்ற நிலை ஏற்படப்போகிறது. வேலைவாய்ப்பு பறிப்பு, ஊதிய வெட்டு ஆகியவை இனி அதிகமாகப்போகிறது. மனிதவளத் துறை மேலாளர்களுக்கு இது முன்கூட்டியே நன்றாகத் தெரியும்.

சிக்கல் ஆழமாகிறது

நடுத்தர வயதினருடைய சிக்கல்கள் தீவிர மடையும். சமூக பொருளாதார நடைமுறைகள் பாதிப்படையப்போகின்றன. சமூக அடுக்கில் மேலே இருக்கும் 1% பெரும் பணக்காரர்கள் செல்வத்தின் பெரும் பகுதியை இன்னும் அதிகமாகக் கைப்பற்றப் போகின்றனர். எஞ்சிய 99% மக்கள் தங்களுடைய வேலைவாய்ப்பை, வருவாயை இழக்கப்போகின்றனர். அதுமட்டுமல்லாமல், இயந்திர மனிதர்கள் தரும் பொருட்களை, சேவைகளைப் பணம் செலுத்தி நுகர வேண்டிய நிலைக்குத் தள்ளப்படப்போகின்றனர். அவர்களுக்கு வருவாய் குறைவதுடன், கிடைக்கும் வருவாயும் செலவழியப்போகிறது. அதே சமயம், நாடுகளின் ‘ஒட்டுமொத்தப் பொருளாதார உற்பத்தி மதிப்பு’ (ஜி.டி.பி.) அதிகமாகப்போகிறது.

இதுவரை நடந்த தொழில் புரட்சிகள் ஏற்படுத்திய பல சவால்களைப் போலவே இந்த நாலாவது தொழில் புரட்சியும் ஏற்படுத்தப்போகிறது.

கார்ல் மார்க்ஸ் விடுத்த எச்சரிக்கையை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். “முதலாளித்துவம் தேவைக்கும் மேல் உற்பத்தி செய்துவிடும், அதன் காரணமாக ஏற்படுகிற நெருக்கடியில் மாட்டிக்கொள்ளும், புதிய வகை உற்பத்தி உறவுகளை உருவாக்கும்; புதிதாகப் பல சாதனங்களை உற்பத்தி செய்யும், மவுனமாக இதைப் பார்த்துக்கொண்டிருக்கும் பெரும்பான்மை மக்களால் முதலாளித்துவம் தடுத்து நிறுத்தப்படும்வரை இத்தகைய நிகழ்ச்சிகளின் சுற்று மேலும் மேலும் தொடரும்” என்பதே அந்த எச்சரிக்கை.

 



Post a Comment

புதியது பழையவை