இருபத்தியோராம் நூற்றாண்டின் திறன்கள்
21St Century Skills
21 ஆம் நூற்றாண்டின் திறன்கள் (21St Century Skills) என்பது திறன்கள், திறமை மற்றும் கற்றல் மனப்பான்மைகளை உள்ளடக்கியது, 21 ஆம் நூற்றாண்டில் சமூகத்திலும் பணியிடங்களிலும் கல்வியாளர்கள்,வணிகத் தலைவர்கள், கல்வியாளர்கள் மற்றும் அரசாங்க நிறுவனங்களால் வெற்றி பெறுவதற்குத் தேவை என அடையாள காணப்பட்டுள்ள திறன்கள். இது வளர்ந்து வரும் பன்னாட்டு இயக்கத்தின் ஒரு பகுதியாகும், இது வேகமாக மாறிவரும் எண்ணிமயமாக்கல் சமுதாயத்தில் வெற்றிக்கான தயாரிப்பில் மாணவர்கள் தேர்ச்சி பெறுவதற்குத் தேவையான திறன்களை மையமாகக் கொண்டுள்ளது. இந்த திறன்களில் பல ஆழ்ந்த கற்றலுடன் தொடர்புடையவை.
இது
👉பகுப்பாய்வு
👉பகுத்தறிவு
👉சிக்கல் தீர்வு
👉குழுப்பணி
போன்ற திறன்களை அடிப்படையாகக் கொண்டது. இந்தத் திறன்கள் வழக்கமான அறிவு சார்ந்த கல்வித் திறன்களிலிருந்து வேறுபடுகின்றன.
20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து 21 ஆம் நூற்றாண்டு வரை,சமூகப் பொருளாதாரமும் தொழில்னுட்பமும் விரைவான மாற்றத்திற்கு உட்பட்டுள்ளது. இதனால் மாணவர்களை, வேலைவாய்ப்பிற்குத் தயார்படுத்தும் கல்வி முறை மீதான கோரிக்கைகள் எழுந்துள்ளன. 1980-களின் தொடக்கத்தில், அரசு, கல்வியாளர்கள் மற்றும் முக்கிய நிறுவனங்கள், மாறிவரும் பணியிடங்கள் மற்றும் சமூகத்தின் கோரிக்கைகளை நிறைவேற்ற மாணவர்களையும் தொழிலாளர்களையும் வழிநடத்துவதற்கான முக்கிய திறன்கள் மற்றும் செயல்படுத்தல் உத்திகளைக் கண்டறிந்து தொடர்ச்சியான அறிக்கைகளை வெளியிட்டனர்.
கருத்துரையிடுக