Top News


கன்னங்கரா கல்விச் சீர்திருத்த முன்மொழிவுகள்


தூரநோக்குடைய தலைவரான கலாநிதி  கன்னங்கரா அவர்கள் இந்நாட்டின் சராசரிக் குடும்பங்களைச் சேர்ந்த பெரும்பாலான பிள்ளைகளின் வாழ்வில் ஒளி பரப்பவந்தவரென அரசியல்வாதிகள், கல்வியாளர்கள், கல்வித்துறைசார் நிபுணர்கள் பலரினால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளவாறு கலாநிதி ஊ.று.று கன்னங்கரா அவர்கள் இந்நாட்டின் கல்வித் துறைக்கு ஆற்றிய பங்களிப்பு பாரியது. இந்நாட்டின் கல்வி அமைச்சராகவும், தேசிய அரச பேரவையின் கல்விக்கான உயர் சபையின் தலைவராகவும், 1931ஆம் ஆண்டு தொடக்கம் 1947ஆம் ஆண்டு வரை அவர் பணியாற்றிய காலகட்டத்தில் அவர் செயற்படுத்திய மற்றும் ஆரம்பித்து வைத்த பல்வேறு திட்டங்கள் இந்நாட்டில் பாரிய சமூகப் புரட்சி ஏற்படக் காரணமாகின. 
மத்திய மகா வித்தியாலயங்களைத் தாபித்தல், கல்வியின் ஊடக மொழியாக தேசிய மொழிகளை உபயோகித்தல், இலவசக் கல்வியை அறிமுகஞ் செய்தல், போன்ற கல்வியின் பல்வேறு பரிமாணங்கள் தொடர்பில் அவர் கொண்டிருந்த ஒட்டு மொத்த தூரநோக்கு பற்றி வெவ்வேறு மீளாய்வார்கள் குறிப்பிட்டுக் கூறியுள்ளனர். எனினும் ஆசிரிய அபிவிருத்தி, சமாதான சகவாழ்விற்கான இசைவு, இரண்டாம் நிலைக் கல்வியில் பல்வகைமையை ஏற்படுத்தல், கலைத்திட்ட சீர்த்திருத்தங்கள் போன்றன தொடர்பான அவரது பங்களி;ப்புக்களும் அதேயளவு முக்கியமானவைகளாகும். 
அடுத்து நாம் கன்னங்கரா அவர்களால் ஏன் சீர்திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டது என்பதை நோக்குவோமாயின் 1931 இல் இலங்கையானது அரசுரிமை நாடாயிற்று அதனால் சட்டவாக்க அதிகாரம் அதனை நிறைவேற்றும் கடமையும் அரச சபைக்கு வாய்த்தன ஒவ்வொரு குழுவுக்கும் அமைச்சர் ஒருவர் தலைமையில் நிறைவேற்றுக் குழுக்கள் அரச சபையில் அமைக்கப்பட்டன கல்வி பற்றிய நிறைவேற்றுக் குழுவுக்கு கல்வி அமைச்சர் திரு கன்னங்கரா அவர்கள் தலைமை தாங்கினார். கல்வி பற்றிய 1939 ஆம் ஆண்டு கட்டளைச் சட்டம் முரண்பாட்டை தீர்க்க உதவியது. கட்டாய பாடசாலை கல்வி பயிலும் வயதில்லை 6 தொடக்கம் 14 ஆண்டுகள் என கட்டளைச் சட்டம் நியாயமாக விதித்தது மொழியின் அடிப்படையில் பிளவுபட்ட இருவகை கல்வி முறை ஆங்கிலக் கல்வியும் சுதேச மொழிக் கல்வியும் காணப்பட்டன இதன் பயனாக சுதேச மொழி கல்வி பயின்ற குழுக்கள் பாதகமான சமூகப் பாதிப்புக்குள்ளாகியது கல்வி பயில்வதற்கு சம வாய்ப்பு இருக்கவில்லை கட்டணம் செலுத்தி கல்வி பயிலக்கூடிய சிறுபான்மையினர் வளமான வாழ்வு வாழ்ந்தனர் ஆனால் தரமான கல்வி பயில வசதி இல்லாதவர்கள் வளமான வாழ்வு பெற முடியவில்லை கல்வி பயிலும் வாய்ப்பு திறமையினால் தீர்மானிக்கப் படவில்லை அதற்கு மாறாக பணம் செலவிட கூடிய ஆற்றலே வாய்ப்பை  தீர்மானித்தது கட்டாயக்கல்வி எழுத்தில் மட்டும் இருந்தே தவிர நடைமுறைப்படுத்தப் படவில்லை இதன் பயனாக பெருந்தொகையானவர்கள் பாடசாலை செல்லவில்லை கல்வித்துறையில் தேர்வுகளில் ஆதிக்கம் அதிகப்படியாக காணப்பட்டது மேற்படி குறைபாடுகளை நீக்கும் முகமாகவே பின்வரும் சீர்திருத்த விதப்புரைகள் ஊ.று.று கன்னங்கரா அவர்களால்; முன்வைக்கப்பட்டது.
இலவசக் கல்வி 

பாடசாலைகளின் கட்டுப்பாடு 
பாடசாலைகளில் சமயம் 

பாடசாலைகளில் கற்பித்தல் மொழி 
பாடசாலை ஒழுங்கமைப்பு 

கிராம கல்வித் திட்டம் 
மத்திய பாடசாலைகள் 

கல்வி நிர்வாகம் 
உயர் கல்வி 

ஆசிரியர் கல்வி 
தொழில்நுட்பக் கல்லூரி 

கைத்தொழில் பாடசாலைகள் 
பரீட்சைகள் போன்ற துறைகளில் தனது திட்டங்களை முன்வைத்தார்.

இவரால் முன்வைக்கப்பட்ட கல்விச் சீர்திருத்தங்களில் அனேகமானவை இன்று நடைமுறைப் படுத்தப்படாத நிலையில் காணப்படுவதை நாம் காண்கிறோம்.
இலவசக் கல்வி 

பிரதான சீர்திருத்தத்தில் ஒன்று அனைவருக்கும் இலவசக் கல்வியாகும் இவரது கொள்கையின்படி ஆரம்பக் கல்வி முதல் பல்கலைக்கழகக் கல்வி வரை அனைவருக்கும் இலவசமாக கல்வி வழங்கப்பட வேண்டுமென முன்மொழியப்பட்டது அரச பாடசாலைகளில் கல்வி இலவசமாக வழங்கப்படுவதுடன் அதில் உதவி பெறும் பாடசாலைகளும் சேர்த்துக் கொள்ளப்பட வாய்ப்பு வழங்கப்பட்டது தகுதியுள்ள ஆசிரியர்களின் சம்பளத்தை அரசு வழங்கும் ஆனால் பாடசாலைகள் வசதிகள் கட்டணத்தை தவிர வேறு எந்தக் கல்விக் கட்டணமும் வசூலிக்க கூடாது என சீர்திருத்தத்தில் விதந்துரைக்கப்பட்டது ஆனால் பெரும்பாலும் இன்றைய தனியார் பாடசாலைகள் கட்டணங்களை பெருமளவில் மாணவரிடமிருந்து வசூலித்து பாடசாலைகளை நடத்துவதை அவதானிக்க முடியும் அத்துடன் அரச பாடசாலைகளும் வெவ்வேறு வடிவங்களிலே மாணவர்களிடமிருந்து பெருந்தொகைப் பணத்தை அறவிடுவதை காணக்கூடியதாக உள்ளது எனவே இவரது இலவசக் கல்வி என்பது இலங்கையிலே ஒரு பாரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது என்பதை நாங்கள் காணக்கூடியதாக உள்ளது.


Post a Comment

புதியது பழையவை